எதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி?

Voter ID Correction: வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாக தங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் விபரங்களை திருத்துவது, சரிபார்ப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்

By: September 20, 2019, 12:12:56 PM

Voter ID Card Correction Verification Online: உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏதுவாக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் உதவி அலுவலர்களை நியமிக்க வேண்டும். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியம் என அனைத்து நிலையிலும் தேர்தல் நடத்தும் அலுவவர்கள், தேர்தல் உதவி அலுவலர்கள் ஆகியோரை நியமி்க்க வேண்டும்” என மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது.

மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு விடும் எனத் தெரிகிறது.

Voter Id Card Correction Online

இதனால், வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாக தங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் விபரங்களை திருத்துவது, சரிபார்ப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்,

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளமான eci.giv.in பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை வழங்குவதன் மூலம் நமக்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

இந்திய பாஸ்போர்ட்

ஓட்டுனர் உரிமம்

ஆதார் அட்டை

பான் அட்டை

ரேஷன் கார்டு

அடையாள அட்டை

வங்கி பாஸ் புத்தகங்கள்

விவசாயியின் அடையாள அட்டை

ஆர்ஜிஐ வழங்கிய ஸ்மார்ட் கார்டு

நீர் / மின்சாரம் / எரிவாயு / தொலைபேசி இணைப்புக்கான சமீபத்திய பில்

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆனால் நிரந்தரமாக மாற்றப்பட்ட அல்லது காலாவதியான குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை புதுப்பித்தல்.

தகுதி வாய்ந்த ஆனால் பதிவு செய்யப்படாத மற்றும் வருங்கால வாக்காளர்கள் (02.01.2002 முதல் 01.01.2003 வரை) வாக்காளருடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களின் (01.01.2001 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) விவரங்கள்.

விவரங்களை சரிபார்க்கும் போது, கமக்கள் தங்கள் தொடர்பு விவரங்களான மின்னஞ்சல்கள், மொபைல் எண்கள் போன்றவற்றை வழங்க வேண்டும். இது வாக்காளர்களின் விண்ணப்பப் பட்டியல், வாக்காளர் சீட்டு, ஈபிஐசியின் நிலை போன்றவற்றைப் பற்றி புதுப்பித்த நிலையில் இருக்க உதவும்.

அதேசமயம், இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் என்ற நோக்கத்துடன் கடந்த செப்.1ம் தேதி முதல், வாக்காளர் சரிபார்ப்பு முகாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இத்திட்டமானது, வரும் 30 வரை நடைமுறையில் இருக்கும்.

இதில் வாக்காளர்கள் தாங்களாகவே வாக்காளர் பட்டியல் விபரங்களை சரிபார்க்கலாம். தவிர, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களும் வீடு, வீடாகச் சென்று விபரங்களை சரிபார்க்கவும், தகுதியுள்ள விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பர். இத்திட்டத்தின்படி, வாக்காளர்கள், தங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சரிபார்க்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Voter id card verification correction how to do voter id correction online election commission of india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X