Electors Verification Program (EVP) 2019: இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் என்ற நோக்கத்துடன் கடந்த செப்.1ம் தேதி முதல், வாக்காளர் சரிபார்ப்பு முகாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இத்திட்டமானது, வரும் 30 வரை நடைமுறையில் இருக்கும்.
இதில் வாக்காளர்கள் தாங்களாகவே வாக்காளர் பட்டியல் விபரங்களை சரிபார்க்கலாம். தவிர, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களும் வீடு, வீடாகச் சென்று விபரங்களை சரிபார்க்கவும், தகுதியுள்ள விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பர். இத்திட்டத்தின்படி, வாக்காளர்கள், தங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சரிபார்க்கலாம்.
வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாக தங்களின் விபரங்களை சரிபார்ப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்,
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளம் - eci.giv.in
அதிகாரப்பூர்வ போர்டல் - தேசிய வாக்காளர் சேவை போர்டல் (என்விஎஸ்பி)
பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை வழங்குவதன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
இந்திய பாஸ்போர்ட்
ஓட்டுனர் உரிமம்
ஆதார் அட்டை
பான் அட்டை
ரேஷன் கார்டு
அடையாள அட்டை
வங்கி பாஸ் புத்தகங்கள்
விவசாயியின் அடையாள அட்டை
ஆர்ஜிஐ வழங்கிய ஸ்மார்ட் கார்டு
நீர் / மின்சாரம் / எரிவாயு / தொலைபேசி இணைப்புக்கான சமீபத்திய பில்
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆனால் நிரந்தரமாக மாற்றப்பட்ட அல்லது காலாவதியான குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை புதுப்பித்தல்.
தகுதி வாய்ந்த ஆனால் பதிவு செய்யப்படாத மற்றும் வருங்கால வாக்காளர்கள் (02.01.2002 முதல் 01.01.2003 வரை) வாக்காளருடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களின் (01.01.2001 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) விவரங்கள்.
விவரங்களை சரிபார்க்கும் போது, கமக்கள் தங்கள் தொடர்பு விவரங்களான மின்னஞ்சல்கள், மொபைல் எண்கள் போன்றவற்றை வழங்க வேண்டும். இது வாக்காளர்களின் விண்ணப்பப் பட்டியல், வாக்காளர் சீட்டு, ஈபிஐசியின் நிலை போன்றவற்றைப் பற்றி புதுப்பித்த நிலையில் இருக்க உதவும்.
NVSP தளம் மூலம் விவரங்களை சரிபார்ப்பது எப்படி?
NVSP தளத்திற்கு செல்லவும்
லாக் இன் செய்யவும்
ரெஜிஸ்டர் செய்யவில்லை எனில், முதலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
ரெஜிஸ்டர் ஃபார்மில், உங்கள் தகவல்களை பதிவிடவும்.
ரெஜிஸ்டர் செய்த பிறகு லாக் இன் செய்யவும்.
அதில், ஹோம் பேஜில் "Electors Verification Program" என்பதை க்ளிக் செய்யவும்.
இதில், 'Not Submitted' என்றிருக்கும் வரிகளுக்கு அருகில் 'View Details' க்ளிக் செய்து, நீங்கள் செய்ய வேண்டிய திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
பிறகு, நீங்கள் திருத்தம் செய்த தகவல்களை Preview செய்து பார்க்கலாம்.
எல்லாம் சரி என்று உறுதி செய்த பிறகு, 'Submit' பட்டனை க்ளிக் செய்யவும்.
இறுதியில் 'My details' க்ளிக் செய்து நீங்கள் திருத்தம் செய்த மாற்றங்களின் இறுதி வடிவத்தை பார்க்கலாம்.