/tamil-ie/media/media_files/uploads/2019/03/D2KElEKUcAA2TgY.jpg)
VP Kalairajan
VP Kalairajan : அமமுகவின் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டு வந்ததால், தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.கலைராஜன் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டு நேற்றிரவு அறிவிக்கப்பட்டார்.
திமுகவில் இணைந்தார் விபி கலைராஜன்
அவருக்குப் பதிலாக அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளராக வி.சுகுமார்பாபு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை திமுகவில் இணைந்தார் வி.பி.கலைராஜன்.
கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில், அதிமுக முன்னாள் MLA திரு. கலைராஜன் திமுகவில் இணைந்தார்.#DMK4TNpic.twitter.com/UzcvUx04qZ
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 21 March 2019
திருச்சியில் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார் வி.பி.கலையரசன். செய்தியாளர்களிடம் பேசிய அவர் “எனக்கும் டிடிவி தினகரனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மிகவிரைவில் அனைத்துக் கட்சியினரும் திமுகவில் இணைவார்கள்” என்று கூறினார்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், அனைத்துக் கட்சிகளும் தங்களின் கூட்டணிகள் மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்ற நிலையில், தேர்தலில் வாய்ப்பளிக்காததாலும், உட்கட்சிப் பூசலாலும் நிறைய கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதையும், வேறு கட்சிகளில் இணைவதையும், வழக்கமாக கொண்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.