scorecardresearch

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள்: கோவையில் எண்டோ மார்ச் வாக்கத்தான் நிகழ்வு

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் எண்டோ மார்ச் வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது.

walkathon for endometrosis women health
Walkathon for Endometrosis and Women health

மாதவிடாய் என்பது பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வயிற்று வலி, உடல் ரீதியான பிரச்சினைகள், மாற்றங்கள், எண்டோமெட்ரியோசிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்தநிலையில் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ராவ் மருத்துவமனை சார்பில் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், வரும் காலங்களில் நோய்களில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் எண்டோ மார்ச் என்னும் வாக்கத்தான் நிகழ்ச்சி இன்று (மார்ச் 26) நடைபெற்றது.

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ராவ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர், டாக்டர் ஆஷா ராவ் ஆகியோர் வாக்கத்தான் நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மருத்துவமனையின் வளாகத்தில் தொடங்கி ஆர்.எஸ்புரம் வழியாக 5 கிலோ மீட்டர் வரை விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் மருத்துவமனை வந்தடைந்தனர். பெண்கள், ஆண்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சிவில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சுகாதாரம், கல்வி, உடற்பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.வி.எம் நிறுவனங்களின் நிறுவனர், நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, டாக்டர் தாமோதர் ராவ், அசோசியேட் டைரக்டர் மற்றும் மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராவ் ஆகியோரும் பங்கேற்றனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Walkathon for endometrosis women health held at coimbatore

Best of Express