கோவை மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையோர தடுப்பு சுவர்களில் "இந்தியா ஒழிக" என்றும் ஆங்கிலத்தில் இந்தியா நீட்டை திணிப்பதாகவும், தமிழ்நாடு இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட சுவர் வாசகங்கள் இன்று காலை முதல் காணப்படுகின்றன.
இந்த சுவர் வாசகங்கள் யாரால் எழுதப்பட்டன என்பது இன்னும் தெரியவில்லை. மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நக்சலைட் மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவல் இருக்கின்றதா என்று இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர். இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“