scorecardresearch

”வீரமணியுடன் மதிய உணவு : எனது நீண்ட நாள் ஆசை” : அண்ணாமலை

திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

”வீரமணியுடன் மதிய உணவு : எனது நீண்ட நாள் ஆசை” : அண்ணாமலை

திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எதிர்கால அரசியல் தலைவர்களாக உருவாக பயிற்சி வழங்கப்படும் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். “ பாஜக தொண்டர் மற்ற கருத்தியலை பின்பற்றும் நபர்களிடம் பேச வேண்டும். அப்படி பேசினால் நம்மில் அது பெரிய மாற்றத்தை உருவாக்கிடும். நான் இதை செய்திருக்கிறேன்.  திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு சாப்பிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்றாகும்.

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் முன்பு, நான் சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்திக்க வேண்டும் என்று கூறினேன்.இதை கேட்டு பாஜக உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் நான் அவரை பார்த்து ஆசீர்வாதம் பெற்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.   

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Want a lunch with veeramani says tamil bjp annamalai