Chennai CAA Protest : கொரோனா வைரஸ் அச்சம் உலகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் ஆட்கொண்டிருக்கிறது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பது தான் கொரோனாவிலிருந்து தப்பிக்க, நாம் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள்.
கோவிட்-19 நோய் பரவுதலை தடுப்பதற்கான அறிவுரைகள் – சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
அதன்படி தமிழகத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் 31.3.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் (10 முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தேர்வுகள் – செய்முறைத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்)
தவிர, திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் (Malls), கேளிக்கை அரங்கங்கள் (Amusement Parks), நீச்சல்
குளங்கள் (Swimming Pools), உடற்பயிற்சி மையங்கள் (Gymnasiumsள), உயிரியல் பூங்காக்கள் (Zoos) மற்றும் அருங்காட்சியகங்கள் (Museums) 31.3.2020 வரை
மூடப்பட வேண்டும், எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதோடு, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், போராட்டங்கள் ஆகியவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய மக்கள் போராடி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களுக்கு முதல்வரின் 10 அறிவுரைகள்
இந்நிலையில் கொரோனா வைரஸை மனதில் கொண்டு, போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக இஸ்லாமிய கூட்டமைப்பினர் முன்னதாக தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறியதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வண்ணாரப்பேட்டை இஸ்லாமியர்கள், போராட்டத்தை தொடர்வதாக கூறியுள்ளனர். சட்டப்பேரவையில் சட்டம் இயற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜமாத் கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.