Advertisment

ஒரு நிமிடத்தில் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலரின் சிறப்பான செயல்

ரயில்வே துறையில் இருந்து வந்த கேப்டன் கூல்  தோனி, இந்த ரயில்வே காவலர் எல்லாம் சமகாலத்தவர் என்பதில் ஆச்சரியமில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Railway Personnel saves passenger CCTV Video :

Railway Personnel saves passenger CCTV Video :

தீபாவளியை திருநாள் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் கூட்டம் அலைமோதும் . சொந்த ஊர்களுக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற உணர்வில்  பயனர்கள் தங்கள் மதியை இழந்து, ஆபத்திற்க்குள் சிக்க நேரிடம். நேற்று, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலில் பயனர் ஒருவர் ஓடியபடி ஏறினார். அப்போது, நிலை தடுமாறி தவறி விழுந்த அவர், ரயிலுக்கும் ரயில் நடைமேடைக்கும் இடையில் விழும் தர்மசங்கடமான சூழல் வந்தது.

Advertisment

அப்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த ரயில்வே  காவலர், சிறிதும் பதட்டப்படாமல் தடுமாறி விழுந்தவரை கண் இமைக்கும் நொடியில் காப்பாற்றி மீண்டும் அந்த ரயிலுக்குள் ஏற்றி வைத்தார்.

அந்த ரயில்வே காவலரை நடவடிக்கையை சற்று உற்றுக் கவனியுங்கள். அந்த மனிதரை காப்பாற்றி விட்டு அடுத்த நிமிடமே தனது கடமைக்குள் சென்று விட்டார். கடமைப் பணி அவரிடம் இயல்பாகவே உள்ளது என்றே தோன்றுகிறது. ரயில்வே துறையில் இருந்து வந்த கேப்டன் கூல்  தோனி, இந்த ரயில்வே காவலர் எல்லாம் சமகாலத்தவர் என்பதில் ஆச்சரியமில்லை.

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment