Advertisment

எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு; போலீஸ் உடன் மல்லுக்கட்டிய அ.தி.மு.க-வினர்: வீடியோ காட்சிகள்

DVAC Raids AIADMK Ex-Minister SP Velumani's house in Coimbatore Tamil News: கோவையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Watch Video: AIADMK Ex-Minister SP Velumani's house Raided by DVAC; supporters got arrested

ADMK supporters who gathered in-front of SP Velumani's house during DVAC Raid got arrested Tamil News

Former AIADMK minister S P Velumani latest news in tamil: கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாகவும், கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு செய்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், நண்பர்கள் வீடுகள், பினாமி நிறுவனங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடியில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே 2 முறை சோதனை நடத்திய நிலையில், தற்போது 3வது முறையாக சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அம்மன் அர்ஜுனன், அருண்குமார், கந்தசாமி, தாமோதரன் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு செல்லும் இணைப்பு சாலைகளை காவல்துறையினர் தடுப்புகளை வைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடியதாலும், போலீசாருடன் வாக்குவாதம் செய்ததாலும் வேலுமணியின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்த எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu Video Aiadmk Admk Sp Velumani Coimbatore Minister Sp Velumani Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment