DMK Chief M Karunanidhi Health: திமுக தலைவர் கருணாநிதி தன் கொள்ளுப் பேரனுடன் இணைந்து விளையாடி தானே ஒரு குழந்தையாக மாறி இருக்கும் தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது.
Advertisment
கடந்த பிப்ரவரி மாதம் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு குடும்பத்துடன் இணைந்து கோபாலப்புரத்தில் கலைஞரை சந்தித்துள்ளனர். அப்போது கொள்ளுப் பேரன் மகிழனுடன் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியானது.
வீடியோவில் கொள்ளுப்பேரன் மகிழன் பேட்டைப் பிடித்து விளையாட கருணாநிதி பந்து வீசுகிறார். அருகில் தமிழரசின் மனைவியும், கலைஞரின் மகள் செல்வியும் உள்ளனர். அந்த வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரல் ஆனது. தனது முதுமை பருவத்திலும் பேரன்களுடன் விளையாடுவது அவரையே ஒரு குழந்தைப் போல உணர வைக்கிறது.
Advertisment
Advertisements
வீட்டில் நடைபெறும் சிறு சிறு மகிழ்ச்சிக்குரிய விஷயங்களைக் கருணாநிதியின் வீட்டாரும் கழகத் தொண்டர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். தற்போது உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் பழைய வீட்யோக்களை எல்லாம் தொண்டர்களும் பொதுமக்களும் பார்த்து வருகின்றனர்.