scorecardresearch

வீடியோ: திருடனாக மாறிய பெண் போலீஸ்… சிசிடிவி கேமராவில் கையும் களவுமாக சிக்கிய பெண் காவலர்

Constable steals chocolates: பெண் காவலர் நந்தினியின் கணவர் கணேஷைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடியோ: திருடனாக மாறிய பெண் போலீஸ்… சிசிடிவி கேமராவில் கையும் களவுமாக சிக்கிய பெண் காவலர்

Chennai Constable steals chocolates: சென்னையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பெண் காவலர் ஒருவர் சாக்லெட் திருடிய வீடியோ வெளியானது. இதை தொடர்ந்து அவரின் கணவர் சூப்பர் மார்கெட் உரிமையாளரை தாக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

Tamil Nadu woman cop caught on camera stealing chocolates: திருடனை பிடிக்க வேண்டிய போலீஸே திருடிய அவலம்:

சென்னை எழும்பூரில் நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு பெண் காவலர் ஒருவர் பொருட்கள் வாங்க வந்துள்ளார். நீண்ட நேரம் செல்போன் பேசிக் கொண்டே உலவிய அவர், சில சாக்லேட் பாக்கெட்களை எடுத்து சட்டை பைக்குள் திருடி வைத்தார். இதைக் கண்ட ஊழியர் ஒருவர், கடை உரிமையாளரிடம் கூறியுள்ளார். பிறகு பில் போடும் பொழுது 2 பொருட்களுக்கு மட்டும் பில் போடும்படி கூறினார். அப்போது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பொருட்களையும் எடுத்து பில் போடுங்கள் என்று கடை உரிமையாளர் பிரனாவ் கூறினார். ஆனால் பாக்கெட்டில் எதுவும் இல்லை என்று சாதிக்க தொடங்கினார் பெண் காவலர் கூறினார்.

lady police steal in supermarket
Chennai lady police steals chocolates in supermarket: சாக்லெட் திருடியதாக சிக்கிய பெண் காவலர்

குற்ற செய்திருப்பதற்கு ஆதாரம் இருந்த நிலையிலும் பெண் காவலர் தான் செய்த தவறை இல்லை என்று நியாயப்படுத்தி வந்துள்ளார். எனவே அவரை பெண் ஊழியர் ஒருவர் சோதனையிடும்படி கடையின் உரிமையாளர் கூறினார். அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் 5 ஸ்டார் சாக்லேட், ஜெம்ஸ் சாக்லேட், பார் ஒன் சாக்லேட், ஓடோமஸ் போன்றவற்றை அவர் பாக்கெட்டில் இருந்து எடுத்துள்ளனர். இருப்பினும் தான் திருடவில்லை என்று சாதித்துள்ளார். பின்னர் சிசிடிவி காட்சிகளைக் காட்டியதால் திருடியதை ஒப்புக் கொண்டார்.

பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு, எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து பெண் காவலரின் கணவர் 2 நண்பர்களுடன் கடைக்கு வந்து, அங்கிருந்த பெண் ஊழியர்களை ஆபாசமாக திட்டியுள்ளார். இதையடுத்து கடை உரிமையாளர் பிரனாவை கடுமையாகத் தாக்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக சிசிடிவி ஆதாரங்கள் உடன் கடை உரிமையாளர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் திருடியவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் நந்தினி என்று தெரியவந்துள்ளது.

அவரை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பெண் காவலர் நந்தினியின் கணவர் கணேஷைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Watch video lady police steals in supermarket cctv video released