Advertisment

'சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்' - திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் அமைச்சராக உள்ள வேலுமணியை ஊழல் மணி என்றே அழைக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
water crisis dmk protest mk stalin - 'சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்' - திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை!

water crisis dmk protest mk stalin - 'சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்' - திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை!

தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து, அரசைக் கண்டித்தும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisment

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் சார்பில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது ஸ்டாலின் பேசுகையில், "குடம் இங்கே, குடிநீர் எங்கே" என்ற நிலை தமிழகம் முழுவதும் தலைத்தூக்கியுள்ளது. குடிநீர் பிரச்னையை போக்காத எடுபிடி அரசைக் கண்டித்து இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் தண்ணீர் எங்கே என்ற நிலையே தற்போது காணுமிடமெல்லாம் உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசிடம் நிதிக்கும், நீதிக்கும், வேலைக்கும், நேர்மைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம் இருப்பது போல தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு அக்கறையும் இல்லாமல், நடவடிக்கை எடுக்கக் கூடிய முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வமும், குடிநீர் பிரச்னைக்கு அடித்தளமாக உள்ள உள்ளாட்சித் துறையை தன்வசம் வைத்துள்ள வேலுமணியும் எவ்வித கவலையும் இல்லாமல் இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், சென்னைக்கு வரக் கூடிய தண்ணீரை தேக்கி வைக்கவுள்ள ஏரிகளின் வறட்சி நிலையை ஆதாரத்தோடு பட்டியலிட்டு காண்பித்தேன். ஏரிகளை சீராக பராமரிக்காவிடில் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என சுட்டிக்காட்டினேன். ஆனால், இது தொடர்பாக ஆளுங்கட்சியினர் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததாலேயே தற்போது தண்ணீர் பஞ்சம் தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

வருகிற ஜூன் 28ம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ளது. ஏற்கெனவே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த தி.மு.க கடிதத்திற்கு அஞ்சியே தங்களின் ஆட்சியை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி அரசு யாகம் நடத்திருக்கிறது. குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்காகவும், மழைக்காகவும் அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை. ஆகவே, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நிறைவேற்றப்படும்.

பள்ளிகளில் குடிக்க தண்ணீர் இல்லை, ஐ.டி. ஊழியர்களை அதன் நிறுவனங்கள் வீட்டிலேயே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதையெல்லாம் சீரமைக்கும் பொறுப்பில் உள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியோ தண்ணீர் பிரச்னை எல்லாம் வதந்தி என கூக்குரலிட்டு வருகிறார்.

இது உள்ளாட்சித் துறை இல்லை ஊழல் ஆட்சித் துறை என்றும், அதன் அமைச்சராக உள்ள வேலுமணியை ஊழல் மணி என்றே அழைக்கவேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்கு 2 வாளி தண்ணீர்தான் பயன்படுத்துகிறேன், மக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.

மக்களுக்கு தேவையான தண்ணீர் இருந்தால் அவர்கள் ஏன் குடங்களோடு சாலையில் வந்து மறியல் போராட்டங்களில் ஈடுபட போகிறார்கள் என்ற சராசரி அறிவு கூடவா முதலமைச்சர் பழனிசாமிக்கு இருக்கவில்லை?. ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி வரை கடந்த 8 ஆண்டுகளாக அ.தி.மு.க தான் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. இந்த 8 ஆண்டுகளில் ஒரேயொரு மெகா குடிநீர் திட்டத்தையாவது அ.தி.மு.க அரசு கொண்டு வந்திருக்கிறதா?

நெம்மேலி, ராமாநாதபுரம், கோவை, தூத்துக்குடி என கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கூட்டுக்குடிநீர் திட்டத்தை சட்டமன்றத்தில் அறிவித்தது அ.தி.மு.க. இதில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. தற்போது, கேரளா கொடுக்கும் தண்ணீரை வேண்டாம் என கூறிவிட்டு, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும் எனக் கூறி அதில் அ.தி.மு.க கமிஷன் அடிக்க பார்க்கிறது" என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment