சென்னையில் 100 டிகிரியை தாண்டிய கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் வெயிலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் மழை நீர் வடிகால் பணி பகலில் நடப்பதால் வெயினால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "இரவில் தொடங்கும் பணிகளை காலை 11 மணிக்குள் முடிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எலக்ட்ரோல் பானம் வழங்க வேண்டும்.
வெப்ப அலை அதிகமாக இருக்கும் நேரத்தில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இடையிடையே போதிய ஓய்வு வழங்க வேண்டும்", என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும், வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தனியார் கட்டுமான துறையினர் வேலை நேரத்தை மாற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு குடிநீர், மோர், குளுக்கோஸ் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழிலாளர்களுக்கு ஓய்வு தேவை. அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் இதற்கு உரிமை உண்டு. இல்லயென்றால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வாழ்வாதார இழப்புக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil