உலகில் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மொபைல் இண்டர்னெட் வாயிலாக பாசனம் செய்யும் நவீன ஏ.ஐ. டெக்னாலஜிக்கு விவசாயிகள் வரவேற்பு. நவீன அறிவியல் உலகை ஆட்கொண்ட தொழில் நுட்பம் செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் ஏ. ஐ. டெக்னாலஜி. இந்த டெக்னாலஜி வேளாண் துறையிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
ஆண்டுதோறும் கோவையில் நடைபெறும் சர்வதேச வேளாண் கண்காட்சியில் வேளாண் துறை சார்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையிலே, உலகம் முழுவதிலும் பல்வேறு துறைகளில் ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் விவசாயத் துறையிலும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த "மொபிடெக்" என தனியார் நிறுவனம் ஒன்று. கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் பார்வைக்காக வைக்கப்பட்டள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பெருந்துறையை சேர்ந்த இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி சொட்டு நீர் பாசனம் என்ற ஒரு கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் மொபைல் செயலியை கொண்டு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவியில் ஒரு சிம் கார்டை மட்டும் பொருத்தி விட்டால் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் இதனை இயக்கலாம். இந்த கருவியானது தோட்டத்தில் உள்ள மண்ணின் தன்மையை கண்டறிந்து அதன் ஈரத்தன்மையை கணக்கிட்டு ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று தானாகவே தீர்மானிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து காலநிலையை கணக்கிட்டு செயல்படும் இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“