சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி., வரை தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், இந்தாண்டு அக்டோபர் மாதம் வரை நீருக்கு தட்டுப்பாடு இல்லை என்று குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையால் கிடைத்த தண்ணீர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தண்ணீர் ஆகியவற்றின் மூலம், ஏரிகளில் 8.3 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,812 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் தற்போது 2,422 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் தற்போது 790 மில்லியன் நீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் தற்போது 1,220 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆகவே, மொத்தமுள்ள 6 ஏரிகளில் 8.32 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு தினமும் 1,000 முதல் 1,100 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி விநியோகம் செய்யப்படுகிறது.
இதில், குழாய் குடிநீர் வசதி இல்லாத இடங்களுக்கு, தினமும் 418 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருவதாகவும், இதன்மூலம் 10 லட்சம் வீடுகளில் வசிக்கும் மக்கள் பயனடைவதாகவும் சென்னை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil