New Update
/indian-express-tamil/media/media_files/rz5ATWroZ6L8SJFAklMs.jpg)
தமிழகத்தில் சுற்றுச் சூழல் விதிகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.
#ED | #TamilNadu தமிழகத்தில் ஆற்றுபடுககைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிபப்டியான மணல்கள் எடுக்கப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் மீது செப். 12, 2023 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் சுற்றுச் சூழல் விதிகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளப்பட்டது. மேலும், வரி ஏய்ப்பு செய்து, முறைகேடாக மணல் விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்தப் புகாரின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி-கே) ஆகியவற்றின் நிபுணர்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், ஒரு நாளைக்கு எத்தனை லாரிகள் வருகிறது? எவ்வளவு அனுமதி பெற்று வருகிறது, அனுமதியின்றி எத்தனை லாரிகள் வருகிறது, அதற்கான பணம் எவ்வளவு வசூல் செய்யப்படுகிறது, மணல் குவாரியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனைகள் செய்தனர்.
அப்போது 50 லாரிகளில் மணல் அள்ள அனுமதி பெற்று 500 லாரிகள் வரை அள்ளியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இதையடுத்து, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்தன.
எனினும் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா விசாரணைக்கு ஆஜராகவில்லை. தொடர்ந்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முயன்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.