திருச்சி, ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (டிச 17) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், குறிப்பிட்ட இடங்களில் 18-ஆம் தேதி மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்திக் குறிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், "திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III (Aerator) மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 17.12.2024 அன்று நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, ஜே.கே. நகர், செம்பட்டு, E.B காலணி ஆகிய இடங்களில் 18-ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
மேலும், காஜாமலை பழையது, ரெங்கா நகர், சுப்ரமணிய நகர் புதியது, வி.என். நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது, எடமலைப்பட்டிபுதூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் புதியது, தென்றல் நகர் பழையது, அரியமங்கலம் கிராமம், மலையப்பநகர் புதியது, மலையப்பநகர் பழையது, ரயில்நகர் புதியது, ரயில்நகர் பழையது, முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது ஆகிய இடங்களில் 18-ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல், M.K. கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டை நாகம்மை வீதி, M.K கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கர் நகர், விவேகானந்தர் நகர், LIC புதியது, கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்த் நகர், சுப்ரமணிய நகர் , சத்தியவாணி கே.கே.நகர், அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூர் உள்ளிட்ட இடங்களில் 18-ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
தொடர்ச்சியாக, பெரியார் நகர் , T.V கோயில், உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர் , சிவா நகர் , ஆனந்தம் நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் 18-ஆம் தேதி நிறுத்தப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, 19-ஆம் தேதி முதல் குடிநீர் விநியோகம் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி - க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.