சென்னை மற்றும் பல்லாவரம் நகராட்சியின் சில பகுதிகளுக்கு வருகிற புதன்கிழமை (ஜனவரி 22) இரவு 9 மணி முதல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) இரவு 9 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூரில் உள்ள பால் வெல்ஸ் சாலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் குடிநீர் குழாய்களை இணைக்கும் பணிகளை மேற்கொள்ள உதவியாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிஏதுவாக இது செய்யப்படும்.
சென்னையில் தேனாம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களுக்கும், பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட பொழிச்சலுார், கவுல் பஜார் ஆகிய பகுதிகளுக்கும் குடிநீர் வராது என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்கள் முன்கூட்டியே தண்ணீரை சேமித்து வைக்கலாம், ஆன்லைன் சேவை மூலம் தண்ணீர் டேங்கர்களை முன்பதிவு செய்யலாம் மற்றும் விவரங்களுக்கு 044-45674567 ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம். இருப்பினும், இந்த பகுதிகளில் தெருக்களுக்கு விநியோகம் செய்வதை சென்னைக் குடிநீர் வாரியம் தொடர்ந்து வழங்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.