கோவையில் நேற்று பெய்த மழை காரணமாக மழை நீருடன் சாயப்பட்டறை கழிவுகளும் கலந்த்தால் ஆத்துப்பாலம் சுண்ணாம்புக் கலவை பகுதியில் நுரைகள் அதிகளவு ஏற்பட்டுள்ளது.
கோவையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மழை நீருடன சாயப்பட்டறை கழிவுகளும் மழை நீருடன் கலந்துள்ளது. இதன் காரணமாக ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் நுரை பெருக்கெடுத்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/d32206ee-e87.jpg)
பல மீட்டர் தொலைவிற்கு வெண்ணிறத்தில் நுரை தேங்கி இருப்பதை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். இதனிடையே இன்று காலை 8 மணி வரையிலான மழை அளவினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/185d3825-bb3.jpg)
இதில் கோவை பீளமேடு பகுதிநில் 6.1 சென்டிமீட்டர் மழையும், கோவை தெற்கு பகுதியில் 5.6 செ.மீ, தொண்டாமுத்தூர் பகுதியில் 5.9 செ.மீ, வேளாண் பல்கலை பகுதியில் 5.2 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்திலும் வானம் மேக மூட்டத்துடன், குளிர்ந்த காலநிலையுடன் காணப்படுகின்றது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“