New Update
/indian-express-tamil/media/media_files/8bWmc1atuM6OOQ5LCUFw.jpg)
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி கனமழை, வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 276 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலச்சரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 15 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறப்பட்டுள்ளன. முதல் நாளில் வந்த தகவலில், நீலகிரி மாவட்டம் கூடலூர் மரப்பாலம் அட்டிகுல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், கூடலூர் ஜயங்கொல்லியைச் சேர்ந்த கல்யாண்குமார் (60) ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
முண்டகை பகுதியில் கட்டுமானத் தொழிலாளராக காளிதாஸ் வேலை பார்த்து வந்துள்ளார். வயநாடு சூரல்மலையில் பூசாரியாக வேலை பார்த்து வந்த கல்யாண்குமாரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்பு.
பந்ததூர் ஷிகாப் சூரல்மலையில் உள்ள பள்ளிவாசலில் இமாம் ஆக பணியாற்றி வந்துள்ளார். வெள்ளம், நிலச்சரிவில் பள்ளி வாசல் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டதில் அவர் உயிரிழந்தார். இவரின் உடல் பாறை இடுகில் இருந்து மீட்கப்பட்டது.
குன்னூர் கரன்சி ஐயப்பன் காலனியைச் சேர்ந்த கொளசல்யா என்பவர் கணவர் செல்லக்குட்டன் மற்றும் 1 வயது மகள் ஆதியா ஆகியோருடன் முண்டகை பகுதியில் வசதித்து வந்தார். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியாகினர்.
மேலும், அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக முண்டகையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் திரிஷோப் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் முதல் 16 வயது சிறுமி வரை இந்த நிலச்சரிவில்சிக்கி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.