சென்னையில் இன்று வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “அதிமுகவை ஒருங்கிணைப்பதில் நெருங்கி விட்டோம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.
தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல”, என்று தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “எங்கள் கட்சி தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பெயரில் அவர்களை சந்தித்து ஆலோசித்தோம். இருவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தோம்”, என்று தெரிவித்திருந்தார்.