/tamil-ie/media/media_files/uploads/2017/12/z958.jpg)
வீடியோ - தஞ்சை பாலாஜி, பாரத் கல்லூரி
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் சூடு பிடித்துவரும் நிலையில், 'இலை' இல்லையென்று தீர்ப்பு வந்துவிட, இலைமறைவாக எப்படியாவது தொப்பி அணிந்துவிடலாம் என டிடிவி முயற்சிக்க, அதுவும் இல்லாமல் போக, பிரஷர் குக்கரை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். அதையும் பிரஷரே இல்லாமல் வாங்கிக் கொண்டு, கூலாக ஓட்டு கேட்டு வருகிறது தினகரன் அணி.
அவர்களது குக்கர் எந்தளவிற்கு பதமாக 'குக்' ஆகப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தநிலையில், நேற்று (டிச.9) மாலை ஆர்.கே.நகரை பார்வையிட தேர்தல் ஆணையம் சார்பாக அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது, வடஇந்திய தேர்தல் அதிகாரி ஒருவர், டிடிவி ஆதரவாளர்கள் கூடியிருந்த இடத்தில், 'காசுக்காக தானே இந்தக் கூட்டம் கூடியிருக்கிறது' என்று பொத்தாம் பொதுவாய் கூற, வெகுண்டெழுந்த டிடிவி ஆதரவாளர்கள், "யாரைப் பார்த்து காசுக்காக வந்த கூட்டம்-னு சொல்றீங்க? நாங்க ஒன்னும் உங்களைப் போன்று பானி பூரி விற்க இங்கு வரவில்லை. நீங்க தான் பானி பூரி விற்க இங்கு வந்தவர்கள்' என்று காரசாரமாய் பதிலளிக்க சிறிதுநேரம் அதகளமானது ஆர்.கே.நகர் ஏரியா!.
அந்த வீடியோக்கள் இதோ,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.