செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்

செந்தில் பாலாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Senthil Balajis wife has filed an additional petition in the Chennai High Court

செந்தில் பாலாஜி மனைவி கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இதயத்தின் 3 முக்கிய குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அறுவை சிசிக்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து தற்போது செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நாளை (ஜுன் 21) அறுவை சிகிக்சை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்கவும், அமலாக்கத் துறை மருத்துவமனையில் வைத்து விசாரணை மேற்கொள்ளவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் விவரம் கேட்டு வந்தனர்.

தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனு, அவரது இடைக்கால ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இன்று (ஜுன் 20) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை எனத் தெரிவித்தது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: