இஸ்ரேல் - ஹாமஸ் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் இருந்து ஆப்ரேசன் அஜய் திட்டத்தின் மூலம் இந்தியர்களை அழைத்து வரும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்தடைந்தது. அதில் 29 தமிழர்கள் வந்த நிலையில் அவர்கள் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர்.
டெல்லியில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு 12 பேர் வந்தனர். அவர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் வரவேற்று வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக இஸ்ரேலில் இருந்து திரும்பிய தமிழர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
”அப்பொழுது கடந்த 4 ஆண்டுகளில் இந்த மாதிரி சந்தித்தது இல்லை. இஸ்ரேல் அரசு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து இருந்தனர். அலார்ட் கொடுத்தால் உடனே பதுங்கி கொள்ள பாதுகாப்பு அறைகள் இருந்தது. சைரன் சத்தம் கேட்டவுடன் பதட்டம் ஏற்பட்டது. களநிலவரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிந்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஒரு வித பயத்துடேனேயே அங்கு இருந்தோம், நிறைய மாணவர்கள் இன்னும் அங்கு இருக்கின்றனர்,” என இஸ்ரேலில் இருந்து திரும்பிய குமரவேல் மாரிமுத்து தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தினமும் தொடர்பு கொண்டு பேசினார்கள். அங்கிருந்து வர உதவினார்கள், என இஸ்ரேலில் இருந்து திரும்பிய பெண் தெரிவித்தார். அடிக்கடி குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட போது கொஞ்சம் பதட்டமாக இருந்தாகவும் நாடு திரும்பியவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் இருந்து திரும்பிய பவுலின், ஹைபா என்ற பகுதியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் உறவினர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக ஊர் திரும்பினேன். தினமும் தமிழக அரசில் இருந்து தொடர்பு கொண்டு பேசி நிலவரம் குறித்து கேட்டறிந்து வந்தனர், என்று கூறினார்.
ஆராய்ச்சி பணிக்கு இடையூறுதான் என்றாலும், நிலவரம் சீரானவுடன் மீண்டும் திரும்பி செல்ல இருப்பதாக ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், உணவுக்கு இப்போது வரை பிரச்சினை இல்லை, இஸ்ரேல் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் பிரச்சினை இருக்கிறது. முதலில் நிறைய பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்துள்ளனர் எனவும் ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்தனர்.
எங்கே என்ன நடக்கிறது என்று தெரியாத நிலை உள்ளது. இந்திய அரசு நடவடிக்கைகள் துவங்கியவுடன் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் மட்டும் 120 பேருக்கு மேல் இருக்கின்றனர். பெரும்பாலும் வந்துவிட்டோம், இன்றும் நாளையும் இரு விமானங்கள் மீட்புபணியில் ஈடுபடுவதால் நிறைய பேர் வருவார்கள் எனவும் ஆராய்ச்சியாளர் மணிமுத்து தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.