கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமடைந்து உள்ள நிலையில் மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் உடன் வருபவர்கள் உள்நோயாளிகள் புறநோயாளிகள் டாக்டர்கள் என அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனைக்கு வரும் நபர்கள் முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டுமே ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை