சென்னையில் மழை: அடுத்து எப்போ மழைக்கு வாய்ப்பு தெரியுமா?
Weather News In Tamil: சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
Chennai Weather Forecast: சென்னையில் இன்று அதிகாலை பரவலாக பல இடங்களில் லேசான மழை பெய்தது. அடுத்த மழை வாய்ப்பு எப்போது? தமிழகத்தின் பிற பகுதிகளின் நிலவரம் என்ன? என்பது தொடர்பான தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
Advertisment
விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (17-ம் தேதி) இரவு வெளியிட்ட தகவல் வருமாறு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இன்று (18-ம் தேதி) காலை 5 மணி முதல் சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி உள்பட பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. எனினும் காலை 7 மணிக்கு மேல் வழக்கமான வானிலை நிலவி வருகிறது. அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரத்தை இந்தப் பட விளக்கங்களில் காணலாம்.
Chennai Weather Forecast: வானிலை அறிக்கை
Chennai Weather News: இன்று (18-ம் தேதி) தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Chennai Weather News: ஜனவரி 19-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்.
Chennai Weather News: ஜனவரி 20-ம் தேதி மழைக்கு வாய்ப்பு இல்லை. வறண்ட வானிலை காணப்படும்.
Chennai Weather News: ஜனவரி 21-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
Chennai Weather News: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ஒரு செமீ மழை பதிவாகியிருக்கிறது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.