Chennai Weather Forecast: சென்னையில் இன்று அதிகாலை பரவலாக பல இடங்களில் லேசான மழை பெய்தது. அடுத்த மழை வாய்ப்பு எப்போது? தமிழகத்தின் பிற பகுதிகளின் நிலவரம் என்ன? என்பது தொடர்பான தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (17-ம் தேதி) இரவு வெளியிட்ட தகவல் வருமாறு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இன்று (18-ம் தேதி) காலை 5 மணி முதல் சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி உள்பட பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. எனினும் காலை 7 மணிக்கு மேல் வழக்கமான வானிலை நிலவி வருகிறது. அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரத்தை இந்தப் பட விளக்கங்களில் காணலாம்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Weather chennai news tamil nadu rains chennai imd report
கண்ணீர் விட்ட சூப்பர் சிங்கர்: மேடையில் பாடி சம்பாதித்த பணத்தை யாராவது இப்படி செய்வார்களா?
திமுக – காங். தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம்; இறுதி நிலையை எட்டுவது எப்போது?
சாதம் வடிநீர், சிறிதளவு எண்ணெய்… மிருதுவான சப்பாத்தி சீக்ரெட் இதுதான்!
Tamil News Today Live : வாக்காளர் தகவல் சீட்டை ஆதாரமாக கொண்டு வாக்களிக்க முடியாது – தேர்தல் ஆணையம்
வெந்தயம்… கல் உப்பு… சாஃப்ட் இட்லி சீக்ரெட்: சிம்பிள் செய்முறை இங்கே!