Weather, Weather chennai, Weather chennai today, Weather forecast chennai, Weather news in tamil, Weather In Tamil Nadu, Weather report today,வெதர்மேன் ரிப்போர்ட், பிரதீப் ஜான், சென்னை வானிலை முன்னறிவிப்பு, மழைபொழிவு, கனமழை, Weather man tamil nadu, Chennai weather, erode weather history, kea weather satellite imagery, ooty weather today live
Weather Chennai News Today: தென் தமிழகத்தில் மழை குறைகிறது. டெல்டா மாவட்டங்களில் இன்று மழை இருக்கிறது. தொடர்ந்து 29, 30, டிசம்பர் 1 தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகம் மழை பொழிந்த இடங்களின் பட்டியலும் தரப்பட்டிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 27) வெளியிட்ட தகவல்கள் வருமாறு: தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை இருக்கிறது. 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
வானத்தை தொட்ட வெங்காய விலை... கவலையில் மக்கள்!
சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். வெப்ப நிலை அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் என இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் அதிகபட்சம் 6 செமீ மழை பெய்திருக்கிறது. புதுச்சேரியில் 4 செமீ, மண்டபம், திருச்செந்தூர், மதுராந்தகம், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் 3 செமீ மழை பதிவாகி இருக்கிறது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.