Weather news in tamil and Fresh Alerts to Fishermen: தமிழகத்தின் பலபகுதிகளில் இன்று ( மே 13) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (மே 12ம் தேதி) இரவு 9.30 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு...
கோவை, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, நீலகிரி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை இருக்கக்கூடும்
Tamil Nadu Weather: இடி மின்னலுடன் மழை
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடிமின்னலுடன் மழை பெய்யும், காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ. என்ற அளவில் இருக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை - கடலின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் வெளியிட்ட தகவல் வருமாறு: ‘நாளை முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும். அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்’ என தெரிவிக்கப்பட்டது.