சென்னையில் நேற்றிரவு பரவலாக பெய்த மழை: மக்கள் மகிழ்ச்சி!
Weather Chennai: நவம்பர் 15 முதல் நவம்பர் 18 வரையிலான நாட்களில் தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
Weather Chennai: நவம்பர் 15 முதல் நவம்பர் 18 வரையிலான நாட்களில் தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
Chennai Weather Report: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
Advertisment
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (நவம்பர் 14) இரவு வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு: ”சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலை அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisment
Advertisements
இதற்கிடையே சென்னையின் ஒரு சில இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. மீனம்பாக்கம், தரமணி, கிண்டி, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதேபோல் புரசைவாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.கடந்த சில தினங்களால் காற்று மாசால் அச்சப்பட்டிருந்த மக்கள் தற்போது ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.