Weather News: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கன மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் மழை பொழிந்த இடங்கள் பட்டியலும் தரப்பட்டிருக்கிறது.
Advertisment
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (16-ம் தேதி) பகல் 11.45 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கை விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் மழை பொழிந்த இடங்கள்
Chennai Weather Forecast: 19, 20-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை
நவம்பர் 17, 18-ம் தேதிகளில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். 19, 20-ம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டமாகவே காணப்படும். சில இடங்களில் லேசான மழை இருக்கும். வெப்பநிலை அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரியாகவும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டனம் ஆகிய இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. மேட்டுப்பாளையம், திருச்செந்தூர், மணியாச்சி ஆகிய இடங்களில் முறையே 9, 8, 7செ.மீ மழை பெய்திருக்கிறது.