Weather News, Chennai Weather Forecast: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. 13-ம் தேதி கன மழை பெய்யக்கூடும்.
Advertisment
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (11-ம் தேதி) வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு:
Chennai Weather News Today: வானிலை அறிக்கை
இன்றும், நாளையும் (11, 12-ம் தேதி) தமிழ்நாடு மற்றும் புதுவையில் வெகு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் குறிப்பிட்ட இடங்களில் கன மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் 13-ம் தேதி லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.
14-ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் தமிழகத்தின் வெகுசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 15-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க மழை இல்லை. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.