Weather News In Tamil, Chennai Weather Forecast: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது அது சற்று குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த வார இறுதியில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், கனமழை பெய்தது. தற்போது அது குறைந்திருக்கிறது.
Advertisment
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிறவு 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த இரு தினங்களுக்கு வட தமிழகம், புதுவை மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது தான் வட தமிழகம் என்பது குறிப்பிடத் தக்கது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 4) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
Advertisment
Advertisements
Weather Chennai News: தமிழ்நாடு மழை
Chennai Weather News: சென்னை வானிலை
சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
சென்னையைப் பொறுத்தவரை, மேகம் பாதி மேகமூட்டமாக இருக்கும். அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியாஸாகவும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 5 செமீ மழை பெய்திருக்கிறது. அரியலூர் மாவட்டம் திருமானூர், செந்துறை, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கும்பக்கோணம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய இடங்களில் 3 செமீ மழை பெய்திருக்கிறது.