Weather News Today: தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய இருக்கிறது. குமரிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது, சென்னை வானிலை ஆய்வு மையம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகம் மழை பொழிந்த இடங்களில் பட்டியலும் தரப்பட்டிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 25) வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு: தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரம் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
Chennai Weather Today: பாம்பன், தங்கச்சி மடம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செமீ மழை
Weather News, IMD Chennai Alerts to Fishermen: மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக் கடல் பகுதியில் சூறைக் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் குமரிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க போகவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலோர கர்நாடகா, வட உள் கர்நாடகா, தென் உள் கர்நாடகா, கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் என இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பாம்பன், தங்கச்சி மடம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செமீ மழை பெய்திருக்கிறது. தேனி மாவட்டம் கூடலூரில் 5 செமீ, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் 4செமீ மழை பெய்திருக்கிறது.