Weather News, IMD Chennai Weather Forecast: தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, புதுகோட்டை போன்ற மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை வானிலை மைய இயக்குனர் அறிவித்தவாறு அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கனமழையின் அழுத்தம் மேலும் அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை அல்லது மிக கன மழை பெய்ய இருக்கிறது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அதிக மழை பெய்த இடங்களின் பட்டியல் தரப்பட்டிருக்கிறது.
ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 29) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடற்கரை ஒட்டிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கன மழை அல்லது மிக கன மழை பெய்ய இருக்கிறது.
Weather Chennai News Today: அதிக மழை பெய்த இடங்களின் பட்டியல்
Chennai Weather News Today: வானிலை அறிக்கை
குறிப்பாக கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் இப்படி கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும். டிசம்பர் 1, 2 தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில மாவட்டங்களில் கன மழையும், ஓரிரு மாவட்டங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும்.
சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு உள்ளதால் இன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதிக்கும், நாளை தென்மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல் மற்றும் மாலத்தீவு கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.