Chennai Weather News Today: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் மாவட்டங்களின் பட்டியலை அறிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பொழிந்த இடங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் வருமாறு: தமிழகத்தில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை இருக்கிறது. அடுத்த இரு நாட்கள் குறிப்பிட்ட இடங்களில் கன மழை இருக்கும்.
Weather Chennai News: அதிக மழை பொழிந்த இடங்களின் பட்டியல்
Weather News Today: வானிலை அறிக்கை
குறிப்பாக நாளை (19-ம் தேதி) தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை இருக்கும். நவம்பர் 20-ம் தேதி விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்ய இருக்கிறது. நாளை முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழை இருக்கும். வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 26 செல்சியஸாகவும் இருக்கும். மேற்கண்ட தகவல்களை வானிலை ஆய்வு மைய புயல் எச்சரிக்கை மைய அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 3 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், பாபநாசம், சிவகிரி, தென்காசி ஆகிய இடங்களிலும், நாகப்பட்டினம் மாவட்டம் அனைக்காரன்சத்திரம் கொள்ளிடம், கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும், மணிமுத்தாறு, உசிலம்பட்டி, பாளையங்கோட்டை, ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு செ.மீ மழையும் பதிவாகி இருக்கின்றன.
18ம் தேதி அதிக மழை பதிவான இடங்கள்
நாகையின் தரங்கம்பாடி பகுதியில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம், சிவகிரி, தென்காசி ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு, உசிலம்பட்டி, பாளையம்கோட்டை, காரைக்கால், வாட்ராப் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ மழை நேற்று பதிவாகியுள்ளது.