இன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் - வெதர்மேன் ரிப்போர்ட்

Chennai weather forecast: இன்றும் நாளையும் சென்னை உள்பட கடற்கறையோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்படுகிறது  என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது...

Weather news in tamil: கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை மாவட்டங்களிலும் பரவலான மழை பொழிவு பதிவாகியுள்ளது. இன்றும் நாளையும் சென்னை உள்பட கடற்கறையோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்படுகிறது  என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மிக வேகமான வளிமண்டல சுழற்சி காரணமாக ராமநாதபுரம், டெல்டா பகுதிகள், கடலூர், சென்னை ஆகிய பகுதிகளில் கன மழையைக் கொண்டுவரும் என்று பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை முதல் தூத்துக்கு வரையிலான அனைத்து கடற்கரையோரப் பகுதிகளிலும் பகல் நேரத்தில் மழையை காணலாம். சென்னையில் பகல நேரத்தில் மழை விட்டுவிட்டு பொழியும் அதனால், இன்று வெள்யே செல்பவர்கள் உங்களுடைய குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். பொதுவாக இரவு முதல் காலை வரை கனமழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று பதிவான மழையின் அளவு (மி.மீ)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு

கன்னியாகுமரியில் குறைந்தபட்சம் 40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குழித்துறை – 140 , பேச்சிப்பாறை அக்ரோ – 70, கன்னிமார் – 63, தக்கலை 63, குளச்சல் 57, இரணியல் – 48, கீழ் கோடையாறு – 48, கொட்டாரம் – 41, பேச்சிப்பாறை – 40

கோவை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

பெரியநாயக்கன் பாளையம் – 123, பில்லூர் – 80, மேட்டுப்பாளையம் – 87, வால்பாறை பி.டி.ஓ – 70, ஆழியாறு அணை – 63, பொள்ளாச்சி – 58, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் – 51, கோவை தெற்கு – 49, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2 – 49

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு

பாம்பன் – 64, கடலாடி – 63, வட்டானம் – 56, ஆர்.எஸ். மங்கலம் – 52, வாலினோக்கம் – 51, ராமேஸ்வரம் – 50, தொண்டி – 41, தங்கச்சிமடம் – 41, மண்டபம் – 40

தூத்துக்குடி மாவட்டத்தி பதிவான மழையின் அளவு

குலசேகரப்பட்டினம் – 82, தூத்துக்குடி துறைமுகம் – 66, திருச்செந்தூர் – 40

நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு

கேத்தி – 62, கோத்தகிரி – 61, கூடலூர் – 59, லோவர் கிளென் மோர்கன் – 57, புரளியாறு 50, ஊட்டி தாவரவியல் பூங்கா – 46, குன்னூர் பி.டி.ஓ – 46, ஊட்டி – 44, கோடநாடு – 42, கெட்டை – 42, கின்னிகோரை – 40 மி.மீ

விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு

தியாகதுருகம் – 57, சுலாங்குறிச்சி – 47, எறையூர் – 44, ரிஷிவந்தியம் – 42,  கலையநல்லூர் – 40, சங்கராபுரம் – 40

திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு

வேடசந்தூர் – 58, வேடசந்தூர் டி.ஆர்.எஸ் – 58, கொடைக்கானல் படகு துறை – 43

கரூர் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு

அரவக்குறிச்சி – 67, கிருஷ்ணாராயபுரம் – 40

திருநெல்வேலி பதிவான மழை அளவு

தென்காசி – 62, கலக்காடு அக்ரோ – 56,  செங்கோட்டை- 45

கிருஷ்ணகிரி மாவட்டதில் பதிவான மழையின் அளவு

போச்சம்பள்ளி – 60, ஊத்தங்கரை – 54, நெடுங்கல் – 45

திருப்பூர் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு

திருமூர்த்தி அணை – 52, தாராபுரம் – 40

தேனி மாவட்டதில் பதிவான மழையின் அளவு

வீரபாண்டி – 48, தேக்கடி – 47, போடி – 45

விருதுநகர் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு

வேம்பகோட்டை – 48, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 42

கடலூர் மாட்டத்தில் பதிவான மழையின் அளவு

பொல்லந்துரை – 41, வேப்பூர் – 40

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் பதிவான மழையின் அளவு

மீனம்பாக்கம் – 65, ஆலந்தூர் – 61, கேளம்பாக்கம் – 47, தாம்பரம் விமானப்படை தளம் – 45, மகாபலிபுரம் – 42, கே.கே.நகர் – 41, கொலப்பாக்கம் – 40, நுங்கம்பாக்கம் – 40, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் – 38, அயனாவரம் – 38, சத்தியபாமா பல்கலைக்கழகம் – 36, செம்பரம்பாக்கம் ஏரி – 33, பூந்தமல்லி – 32, சோழிங்கநல்லூர் – 30, சோழவரம் – 30, ரெட்ஹில்ஸ் – 28, கிண்டி – 27, தாம்பரம் – 26, கொரட்டூர் அணைகட்டு – 23, மதுராந்தகம் – 23, அம்பத்தூர் – 22, காட்டாங்குளத்தூர் – 22, மெரினா – 19, செங்கல்பட்டு – 18, தாமரைப்பாக்கம் – 17, திருப்பூருர் – 17, காட்டுப்பக்கம் – 16, எண்ணூர் – 15, பாரிஸ் – 15, மாதவரம் – 13, ஊத்துகோட்டை – 11, கும்மிடிபூண்டி – 10, பொன்னேரி – 10

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close