Weather News In Tamil: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கன மழை பொழிகிறது. ஒருநாள் விடுமுறை விட்டு, அடுத்த 2 நாட்கள் கன மழையை எதிர்பார்க்கலாம். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சிதம்பரத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சத்யபாமா பல்கலைக்கழக பகுதியிலும் அதிகபட்சமாக 8 செமீ மழை பெய்திருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (நவம்பர் 22) வெளியிட்ட வானிலை அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்கிறது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை உண்டு.
Tamil Nadu Weather News: கடந்த 24 மணி நேர மழை அளவு
Chennai Weather Forecast: வானிலை அறிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் இன்று (23-ம் தேதி) மிதமான மழை பெய்யும். 24-ம் தேதி தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வட தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை இருக்கிறது. 25-ம் தேதி கடலோர தமிழ்நாடு மற்றும் புதுவையின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். உள் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-ம் தேதி வானிலை நிலவரம், 26-ம் தேதியும் தொடரக்கூடும்.
23-ம் தேதி கன மழை பற்றிய தகவல் இல்லை. ஆனால் 24, 25, 26-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை இருக்கும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை தெரிவிக்கிறது.
சென்னை மழை
நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பள்ளிக்கரணை, வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, எழும்பூர் ஆகிய பகுதிகளில் காலையிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தரமணி, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், அடையாறு, சேப்பாக்கம், மெரினா, பட்டினப்பாக்கம், ஆலந்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தக்கரை, கீழ்பாக்கம், சேத்துப்பட்டு, தேனாம்பேட்டை, மந்தைவெளி, புரசைவாக்கம் போன்ற இடங்களிலும் மழை பெய்து வருகிறது.