Advertisment

Weather News: 3 நாட்களுக்கு மிக கனமழை - கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Weather News Live Updates : கோவை,நீலகிரி , ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Weather,Chennai Weather News,Chennai Weather Forecast,வானிலை,வானிலை அறிக்கை,சென்னை வானிலை

Chennai Weather,Chennai Weather News,Chennai Weather Forecast,வானிலை,வானிலை அறிக்கை,சென்னை வானிலை

Weather News, Chennai Weather Forecast:  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும், குறிப்பாக கோவை,நீலகிரி , ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

 

சென்னை வானிலை தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க , இங்கே கிளிக் செய்யுங்கள்

 

மீனவர்களுக்கு எச்சரிக்கை : சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், மழைதொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

Weather news live updates : தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன்  ஒரு பக்கத்தில் இங்கே காணலாம்.  














Highlights

    07:35 (IST)01 Dec 2019

    சென்னையில் சதம் அடிக்க காத்திருக்கும் மழை

    சென்னையில், விடிய விடிய மழை பெய்துள்ள போதிலும், வரும் தினங்களிலும், சென்னைக்கு நல்ல மழை காத்திருக்கிறது. மழை, சென்னையில் சதமடிக்க காத்துக்கொண்டிருப்பதாக, தமிழ்நாடு வெதர்மேன், தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    17:56 (IST)30 Nov 2019

    ஞாயிற்றுக் கிழமை மிக கன மழை, கடலோர மாவட்டங்கள் உஷார்

    குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் டிசம்பர் 1 அன்று மிக கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. மேற்கு மாவட்டங்கள் வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

    கடலூரில் இன்று பலத்த மழை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    13:21 (IST)30 Nov 2019

    தமிழகத்திற்கு பொன்னான நாள் - சென்னை வெதர்மென் அப்டேட்ஸ்

    மழை தரும் கருமேக கூடங்கள் தற்போது கடலூர்-பாண்டிச்சேரி கடலோர பகுதிகளில் மையம் கொண்டிருப்பதாகவும், மேலும் அது கொஞ்சம் கொஞ்சமாக  இன்று மாலை வேலையில் சென்னையை நோக்கி நகர்ந்து கனமழையைத் தரும் என்று தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

    13:08 (IST)30 Nov 2019

    அடுத்த 48 மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் மழை -

    River Tamiraparani (East Flowing) is rising rapidly at #Kallidaikurichi #Tirunelveli Dt #Tamilnadu due to very heavy rain in its catchment and is within 1m to its HFL. Hydrograph is appended. @tnsdma @ndmaindia @NDRFHQ @PTTVOnlineNews @dailythanthi @News18TamilNadu @sunnewstamil pic.twitter.com/HnbaXepWZj— Central Water Commission Official Flood Forecast (@CWCOfficial_FF) November 30, 2019

    இதுவரை கடலோர மாவட்டங்களில் மட்டும் பெய்து வந்த கனமழை, தற்போது அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால்  இனி தமிழக உள்மாவட்டங்களான  நீலகிரி, குன்னூர், கொடைக்கானல்  போன்ற இடங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.  

    இந்நிலையில், தொடர்ச்சியான மழையால் தாமிரபரணி  ஆற்றின் நீர்படிக்கை அளவு  நன்கு உயர்ந்துள்ளது. 

    publive-image 

    12:22 (IST)30 Nov 2019

    வடகிழக்கு பருவமழையால் தமிழகத்திற்கு கிடைத்த நன்மைகள்:

    சென்னையில் 1,62,284 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு நல்ல முறையில் அமல்படுத்தப்பட்டதால் , சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது

    12:13 (IST)30 Nov 2019

    தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை பற்றிய முழு விவரங்கள் (2/2) :

    இந்த வடகிழக்கு பருவமழை காலம் ஏன் தமிழகத்திற்கு முக்கியம்:  தமிழகத்தின் வருடாந்திர மழைப்பொழிவான 914.4 மி.மீட்டர் மழையில், வடகிழக்கு பருவமழையின்போது மட்டுமே 438 மி,மீ. மழையை தமிழகம் பெற்று விடுகிறது. இந்த காலகட்டத்தின் சில மாவட்டங்களில் 60 சதவீதம் வரை அளவிற்கு கூட மழைப்பொழிவு காணப்படுகிறது

    அக்டோபர் 16 இந்திய பருவக் காலம் வரலாற்றில் ஏன் முக்கியம் : தென்மேற்கு பருவழை முடிந்தநாளும், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தத நிகழ்வும் அக்டோபர் 16ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.   
     

    12:09 (IST)30 Nov 2019

    தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை பற்றிய முழு விவரங்கள் (1/2) :

    இந்திய நாட்டில் இரண்டு வகையான பருவமழை காலம் உண்டு. ஒன்று தென்மேற்கு பருவமழை காலம், மற்றொன்று வடகிழக்கு பருவமழை காலம். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான  தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில், இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நல்ல மழைப்பொழிவு காணப்பட்டது .  தமிழகத்தை பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழையின்போதே ( அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் ) இங்கு அதிகமான மழைப்பொழிவு காணப்படுகிறது .

    இந்த வடகிழக்கு பருவமழையில் கிடைத்த விளைச்சலை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் பொங்கல் தினம் கொண்டாடப்படுகிறது.    

    publive-image

    11:14 (IST)30 Nov 2019

    டெல்லி காற்று மாசு கணிசமாக குறைந்தது

    டெல்லி காற்றில் உள்ள மாசின் அளவு தற்போது மக்கள் சுவாசிக்கும் அளவில்  முன்னேறியுள்ளது. டெல்லி  விமான நிலையம் அருகே Air Quality Index- ன் அளவு 114 ( Moderate), இந்தியா கேட் அருகே 125 கவும் உள்ளது.   

    11:01 (IST)30 Nov 2019

    குற்றால அருவியில் குளிக்கத் தடை

    தொடர்ந்து பெய்யும் கனமழை காரணத்தால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.  

    10:14 (IST)30 Nov 2019

    கனமழை எதிரொலி - மக்கள் சாலை மறியல் போராட்டம்

    இடைவிடாமல் பெய்யும் கனமழையின் காரணமாக  புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து போதிய முன்னேர்பாடுகள்  செய்யவில்லை என்று கூறி பொதுமக்கள் தங்கள்  கால்நடைகளுடன்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   

    09:43 (IST)30 Nov 2019

    காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது- சென்னை வானிலை மையம்

    இந்திய மத்திய பெருங்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிதாய் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாகவும், இதனால் தற்போது பெய்துவரும் கனமழையின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு சூறாவளியுடன் கூடிய காற்று வீச இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்    

    09:33 (IST)30 Nov 2019

    உடல் திறன் தகுதித்தேர்வு தள்ளிவைப்பு - விழுப்புரம் எஸ்.பி.. ஜெயக்குமார் அறிவிப்பு

    இன்று  நடக்கவிருந்த பெண் காவலர்களுக்கான உடல் திறன் தகுதித்தேர்வை தள்ளிவைப்பதாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  மேலும்,  இந்த  தகுதித்தேர்வு வரும் டிசம்பர்  3 ஒத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.   

    09:20 (IST)30 Nov 2019

    சென்னை ஏரிகள் நிரம்புகின்றன:

    சென்னையில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையின்  காரணமாக  செம்பாக்கம் ஏரி, புழல் ஏரியில் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், இரண்டு நாட்கள் தொடர்மழை பெய்தால் சென்னையில் இருக்கும் மற்ற எரிகள் தனது முழுக்கொள்ளளவை  எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது . இதனால், உபரிநீர் வெளியேற்றப் படும் சூழ்நிலையும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது       

    09:06 (IST)30 Nov 2019

    ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    ராமநாதபுரம்  கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசிவருவதால் வரும் நவம்பர் 2ம் தேதி  வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகம் மற்றும் புதுவை  கடலோர  மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.       

    08:58 (IST)30 Nov 2019

    தஞ்சை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு:

    கனமழை காரணமாக தஞ்சை மாவட்ட  பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட நிர்வாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

    publive-image
    தஞ்சை மாவட்டம் 

    08:48 (IST)30 Nov 2019

    தமிழ்நாடு வெதர்மென் அப்டேட்ஸ்

    தமிழ்நாடு வெதர்மென் தனது ட்விட்டரில்,  சென்னை முதல் கன்னியாகுமரி வரை நல்ல மழைதரும் கார்மேகங்கள் உருவாகியுள்ளது. இந்த கார்மேகங்கள் மிகவும் வலுவாக தன்னை நிலைநிருத்திக் கொள்வதாலும், மேலும் கார்மேகங்கள் தமிகத்தை நோக்கி வருகை தருவதாலும் , அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நிலைக்ககூடும் என்று பதிவிட்டுள்ளார்.  

    தமிழ்நாடு வெதர்மேன் படங்கள்

    publive-image

                                                                                                                                           தமிழ்நாடு வெதர்மென் படங்கள் 

    08:32 (IST)30 Nov 2019

    கனமழை எதிரொலி : பள்ளிகளுக்கு விடுமுறை

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த மலையின் காரணமாக  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  சிவகங்கை, காரைக்கால் புதுகோட்டை ,நாகை போன்ற மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    Weather news live updates : சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடற்கரை ஒட்டிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கன மழை அல்லது மிக கன மழை பெய்ய இருக்கிறது.

    சென்னையில் நேற்று அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவியது.

     

    Chennai Tamilnadu Weather
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment