Weather News, Tamil Nadu Weatherman Predicts heavy rain in chennai: சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த 3 நாட்களுக்கான வானிலை முன் அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எந்தெந்த பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு, இடியுடன் கூடிய மழை எங்கே இருக்கும்? என்பவை அறிவிக்கப்பட்டன. சென்னையில் வெள்ளி காலை முதல் கன மழை எதிர்பார்க்கலாம் என தனியார் வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
Chennai Weather Forecast: இன்றைய வானிலை
வடகிழக்கு பருவ மழையையொட்டி சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு:
நவம்பர் 12-ம் தேதி (வியாழக்கிழமை): தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான இடியுடன் கூடிய மழை பல இடங்களில் இருக்கும். புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் உட்பகுதியில் சில இடங்களிலும் இந்த நிலை நீடிக்கும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
13-ம் தேதி: தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகியவற்றை உள்ளடக்கிய பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இடியுடன் பெய்யும்.
14-ம் தேதி: தீபாவளி தினமான சனிக்கிழமை கடலோர தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை இடியுடன் பெய்யக்கூடும். புதுவை, காரைக்காலில் சில இடங்களில் இந்த நிலை இருக்கும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் குறிப்பிட்ட இடங்களில் அன்று இடியுடன் கன மழை இருக்கும்.
15-ம் தேதி: தீபாவளிக்கு மறுநாள் தமிழகம், புதுவை, காரைக்காலின் பல இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை இருக்கும். 14, 15-ம் தேதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கன மழை வாய்ப்பும் இருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரம் வானம், மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வியாழக்கிழமை நண்பகலில் கூறியிருப்பதாவது; சென்னையில் இன்னும் சில மணி நேரங்கள் நிலையாக, மாறுபட்ட தீவிரத்துடன் தொடரும் மழை. கடந்த 3 மணி நேரத்தில் எண்ணூர் 50 மிமீ மழையை நகரில் அதிக அளவில் பதிவாகியுள்ளது.
சென்னையில் நள்ளிரவு / நாளை காலை முதல் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைவிட அதிக மழை பதிவாகும்’ என கூறியிருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"