டெல்டா பகுதிகளில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி... நாகையில் பள்ளி விடுமுறை!
Chennai Weather Forecast: சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Chennai Weather Forecast: சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Weather News Today: தமிழ்நாட்டில் கன மழை குறைகிறது. 9 மாவட்டங்களில் மிதமான மழையும், 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகம் மழை பதிவான இடங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Advertisment
சென்னை பெடஸ்டிரியன் ப்ளாசா எப்படி இருக்கு?
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (21-ம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு:
Advertisment
Advertisements
தமிழ்நாடு மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்கிறது. குறிப்பாக கோயம்புத்தூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகல், தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும்.
Weather News: செம்பரம்பாக்கம், கொளப்பாக்கம், தரமணி ஆகிய இடங்களில் 4 செமீ மழை
Chennai Weather News: வானிலை அறிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையை அடுத்த 24 மணி நேரத்தில் எதிர்பார்க்கலாம்.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அதிகபட்சமாக 7 செ.மீ, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஆகிய இடங்களில் 6 செமீ, நிலக்கோட்டை, பாப்பிரெட்டி பட்டி ஆகிய இடங்களில் 5 செமீ, காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம், கொளப்பாக்கம், தரமணி ஆகிய இடங்களில் 4 செமீ மழை பதிவாகி இருக்கிறது.
நாகையில் பள்ளி விடுமுறை
நாகையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று நாகை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர். திருவாரூரின் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. தேனியின் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கடலூரின் விருதாச்சலம், திட்டக்குடி, நெய்வேலி மற்றும் இதர பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.