சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை? வானிலை ஆய்வு மையம் பட்டியல்
Weather News Today: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
By: WebDesk
Updated: December 30, 2019, 07:50:14 PM
Weather Tamil Nadu, Weather Tamil Nadu News, IMD Chennai Weather Forecast, சென்னை வானிலை ஆய்வு மையம், வானிலை அறிக்கை
Chennai Weather News: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை? என்கிற பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. ஜனவரி 3-ம் தேதி வரையிலான மழை வாய்ப்பு பற்றிய தகவல்களையும் கூறியிருக்கிறது.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 30) பகல் 12.30 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஜனவரி 3-ம் தேதி வரை இந்தச் சூழல் நிலவக்கூடும்.
Chennai Weather Forecast: சென்னை வானிலை
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சென்னை டிஜிபி அலுவலகம், எண்ணூர் ஏ.டபிள்யூ.எஸ். ஆகிய பகுதிகளில் 4 செமீ மழை பதிவாகி இருக்கிறது.
Weather News Today: சென்னை மழை பட்டியல்
சென்னையில் சராசரியாக 3 செமீ, ரெட் ஹில்ஸ் 2 செமீ, அண்ணா பல்கலைக்கழகம், சோழவரம், சத்யபாமா பல்கலைக்கழகம், புழல் ஆகிய பகுதிகளில் 1 செமீ மழை பெய்திருக்கிறது. மேற்கண்ட தகவல்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றைய செய்திகள் தொடர்பான ‘லைவ் கவரேஜ்’ படிக்க க்ளிக் செய்யவும்