வெப்பச் சலனம், மழையைத் தருமா? வானிலை அறிக்கை

weather news: சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Weather News In Tamil: வெப்பச் சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட காலநிலையும், சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “குமரிக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூர் பகுதியில் 2.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் கொலஞ்சல் மற்றும் புலிகாட் பகுதியில் கடலில் தொலைதூர காரணங்களால் ஏற்படும் அலை வீசுவதால் காற்று பலமாக வீசும் மற்றும் அலைகள் 2 முதல் 3 , 4 அடி வரை உயரம் வரக்கூடும். அதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைக்க வேண்டாம்.

Weather News Latest: இன்றும் நாளையும் மிதமான மழை, 13-ம் தேதி கன மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு மேல் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 31 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 24 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close