Latest Weather News: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலையில் மிதமான மழை பொழிந்தது. முக்கியமாக கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர் போன்ற இடங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இருந்தாலும், உள்மாவட்டங்களில் மழை கணிசமாக குறைந்திருக்கிறது.
இந்தியா- மேற்கு இந்தியா அணிகள் விளையாடும் முதல் ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படாது என்று பலரும் யூகிக்கின்றனர். இருப்பினும், மழை குறிக்கீடு இருக்கும் என்ற கருத்தால் டிக்கெட் விற்பனை தற்போது மந்தமான சூழலில் நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேர மழை நிலவரம் குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்தும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய புவியரசன், "தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாமக்கல், சேலம், தூத்துக்குடி, ராமநாதபுரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் .
தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 43 சதவீதம் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம் ஆகும். இதுவரை அதிகபட்சமாக கடலூர் மற்றும் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 8 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் மணிமுத்தாரில் 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
Chennai Rain Update, Today & Tomorrow Weather
குறைந்தபட்ச மழையாக புதுவையில் 28 செ.மீ., வேலூர் 26 செ.மீ, பெரம்பலூர் 24 செ.மீ., மதுரை 23 செ.மீ., திருவண்ணாமலையில் 21 செ.மீ., சென்னை 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானமழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை ஆக 30 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச தண்டனையாக 25 டிகிரி செல்சியஸும் பதிவாகக்கூடும்" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.