/tamil-ie/media/media_files/uploads/2020/05/a51-1.jpg)
Weather Reports in Tamil Nadu: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், ''தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள கடைகள் மூடல் : மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடியமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் ”.
மேலும், குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் எனவும், அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் 31-ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் கைது - எதிர்ப்புத் தெரிவித்து சித்த மருத்துவர் தணிகாசலம் சார்பில் மனு
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, நெல்லை, பாளையங்கோட்டை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, கோதையார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.