கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் அதிக வலிமை பெற்றதாக மாறும் என்றும் வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும் என மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். காலநிலை மாற்றத்தால் 'மரைன் ஹீட் வேவ்' மாதக் கணக்கில் தொடர்கிறது.
மரைன் ஹீட் வேவ் காரணமாக புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை குறிப்பாக தமிழகத்தில் காலநிலை மாற்றம் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. ஜூன், ஜூலை மாதங்களிலேயே கோடை வெயில் போல கொளுத்துவதும், வெள்ளத்தையே சந்திக்காத மதுரையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் சென்னையில் முன்னரே கனமழை என கனமழை மாறி வருகிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும். வரும் காலங்களில் உருவாகும் புயல்கள் மிகவும் வலிமையானதாக இருக்கும் என்றும் கடல் வெப்ப அலைகள் காரணமாக புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும் எனவும் வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது. கால நிலை மாற்றம் காரணமாக மேகங்கள் பரப்பளவு குறைந்து, அதிக நீரை கொண்ட மேகங்கள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
இதனால் குறிப்பிட்ட இடத்தில் அதிக கன மழை பெய்யும் எனவும் கால நிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலை மாத கணக்கில் தொடரும் எனவும் தெரிவித்தார். இதனால் கடல் பகுதியில் உருவாகும் புயல் கடல் வெப்பநிலை பகுதியை கடக்கும்போது மிக வலிமையானதாக இருக்கும் என்றார்.
கடல் வெப்ப அலை காரணமாக அதிகபட்சமாக மழை பெய்யும், அதனை கணிக்கவும் முடியாது என்று கூறினார். அண்டார்டிகாவில் தற்போது நீருக்கடியில் ஒரு கிளாடரை அமைக்க இருக்கிறோம் இதன் மூலம் வெப்ப பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“