Weather, Weather chennai, Weather chennai update, chennai Weather, chennai Weather forecast, chennai Weather today, tamil nadu Weather report, வானிலை, இன்றைய வானிலை, வானிலை அறிக்கை, சென்னை வானிலை ஆய்வு மையம், Weather news, Weather tamil news, Weather news in tamil, Weather latest tamil news
Weather tamil news: தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Advertisment
சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்திலும் ஆங்காங்கே சில சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவலாக லேசான மழை பெய்தது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஒரு பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"