Weather tamil news: தமிழகத்தில் மழை பொழிய வாய்ப்பிருக்கும் இடங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் தேன்கனிக்கோட்டையில் அதிகபட்ச மழை பதிவாகியிருக்கிறது.
Advertisment
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் வருமாறு: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும். 11-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
Weather chennai news: தேன்கனிக்கோட்டையில் 3 செமீ மழை பெய்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 3 செமீ மழை பெய்திருக்கிறது. நீலகிரி மாவட்டம் கெட்டி மற்றும் குன்னூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் 2 செமீ மழை பொழிந்தது.
நீலகிரி மாவட்டம் கே.பிரிட்ஜ், ஜி.பஜார், நடுவட்டம், ஊட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, கன்னியாகுமரி மாவட்டம் கீழ் கோதையாறு ஆகிய இடங்களில் ஒரு செமீ மழை பதிவாகியிருக்கிறது.