சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை மாலை வரை மிக கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை கணிப்பாளரான தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை (08.01.2024) மாலை வரை மிக கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை கணிப்பாளரான தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தகவல் தெரிவித்துள்ளார்.
தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணர் பிரதீப் ஜான் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. டெல்டா உள்பட தென் மாவட்டங்களில் அடுத்த 2 - 3 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையைப் போன்று செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய சுற்றுப்புற மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வழக்கமாக ஜனவரி மாதத்தில் சராசரியாக 2 செ.மீ. மழை பதிவாகும். தற்போது 2 - 3 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆனால், இம்முறை 10 செ.மீ. மழை பெய்யக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“