தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் பருவ மழை காலத்தில் நல்ல மழை கிடைக்கும் என்று என்று தெரிவித்துள்ளார்
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கண்டிப்பாக புயல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், மேலடுக்கு, சுழற்சியானது மேலும் வலுவடைந்து காற்றழுத்த பகுதியாக மாறி மேலும் காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக மாறும். அப்போது, புயலாக அறிவிக்கப்படும். இந்த புயல் நமக்கு மத்திய வங்க கடலில் இருந்து அந்தமான் கடல் பக்கத்தில் புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அங்கிருந்து புயல் உருவாகி அந்தமான் பக்கத்தில் மழை பருவ மழை தொடங்கி புயலை இழுத்துக் கொண்டு பங்களாதேஷ் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்தப் புயலுக்கும் தமிழகத்திற்கும் மிகத் தொலைவில் இருக்கிறது. நேரடியான தாக்கம் இருக்காது. புயல் உருவாகி நமது கடற்கரையை விட்டு விலகி செல்வதைப் பார்க்கிறோம். அதனால், படிப்படியாக மழை குறையும். மே 24-ம் தேதி வரை நமக்கு மழைத் தாக்கம் இருக்கும். மே 25-ம் தேதியிலிருந்து படிப்படியாக மழை குறையும். ஆனால், தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் செல்ல செல்ல ஈரப்பதம் உள்ள காற்று கேரளப் பகுதியான திருவனந்தபுரம் கன்னியாகுமரி பகுதியில் மட்டும் நல்ல மழை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த மூன்று நாட்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற இடங்களில் மே 24, 25 தேதிகளில் படிப்படியாக மழை குறைந்து விடும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“